டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அயர்லாந்து!

டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
டெஸ்ட்  கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அயர்லாந்து!

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ரவரி 28) அபுதாபியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரன் 53 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

டெஸ்ட்  கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அயர்லாந்து!
இவர் புதிய ரவி அஸ்வின்; இங்கிலாந்து வீரரை புகழ்ந்த முன்னாள் கேப்டன்!

அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஸியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 53 ரன்களுடனும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 26 ரன்கள் முன்னிலையுடன் ஆப்கானிஸ்தான் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 55 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் மற்றும் பேரி மெக்கார்தி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டெஸ்ட்  கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அயர்லாந்து!
பிசிசிஐ-க்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது அயர்லாந்து. அந்த அணி 31.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com