
இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் சோயிப் பஷீரை புதிய ரவிச்சந்திரன் அஸ்வின் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழ்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பஷீர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் சோயிப் பஷீரை புதிய ரவிச்சந்திரன் அஸ்வின் என மைக்கேல் வாகன் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த வாரம் சிறந்த வாரங்களில் ஒன்றாக அமைந்தது. சோயிப் பஷீர் என்ற உலகத் தரத்திலான வீரரை இங்கிலாந்து அணி கண்டெடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவரை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7 ஆம் தேதி முதல் தர்மசாலாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.