அரையிறுதிக்கான அணியில் இவர் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி: அஜிங்க்யா ரஹானே

அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அரையிறுதிக்கான அணியில் இவர் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி: அஜிங்க்யா ரஹானே

அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ரஞ்சிக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் மோதுகின்றன.

அரையிறுதிக்கான அணியில் இவர் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி: அஜிங்க்யா ரஹானே
பிசிசிஐ-க்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

இந்த நிலையில், அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் மும்பை அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு அவர் அணியில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மும்பை அணிக்காக இதுவரை சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார். அரையிறுதிப் போட்டிக்காக அவருக்கு புதிதாக அறிவுரை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com