16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதனை படைத்த நியூசி. வீரர்!

16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாதனை படைத்துள்ளார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதனை படைத்த நியூசி. வீரர்!

16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிளன் பிளிப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதனை படைத்த நியூசி. வீரர்!
ரஞ்சி அரையிறுதி: சதம் விளாசிய ஷர்துல் தாக்குர்; வலுவான நிலையில் மும்பை!

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் கிளன் பிளிப்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கிளன் பிளிப்ஸ்.

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜீத்தன் படேல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதனை படைத்த நியூசி. வீரர்!
ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா நீல் வாக்னர்?

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளிப்ஸ் ஆஸ்திரேலிய வீரர்கள் உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதற்கு முன்னதாக கிளன் பிளிப்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com