நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க்கிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நீல் வாக்னர் மீண்டும் அணியில் இடம்பெறும் சூழல் உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ரூர்க்கிக்கு காயம் ஏற்பட்டதால் பெவிலியன் திரும்பினார். அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்வதற்கு மட்டுமே வந்தார். இதனால் அவர் அடுத்தப் போட்டியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பேசியதாவது: நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியமிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்தப் போட்டியில் இடம்பெறுவது குறித்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும். நாங்கள் அடுத்த இரண்டு நாள்கள் காத்திருந்து பார்க்கலாம் என முடிவு செய்துள்ளோம். அடுத்த 24 மணி நேரத்தில் நியூசிலாந்து அணி விவரம் குறித்த தகவல் வெளியாகும். கடந்த வாரம் நீல் வாக்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பீல்டிங்கும் செய்தார். அவருக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு ஓய்வு முடிவை அறிவித்த நீல் வாக்னர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது வில்லியம் ஓ ரூர்க்கிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நீல் வாக்னர் ஓய்வு முடிவைத் திரும்ப பெற்று அணியில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. நியூசிலாந்து அணி அவரை மீண்டும் அணியில் இணைய அழைப்பு விடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 8 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் கிளிம்ஸ்!

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike





