பந்துவீச்சில் அசத்திய நேதன் லயன்; நியூசி.யை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

பந்துவீச்சில் அசத்திய நேதன் லயன்; நியூசி.யை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
Published on

நேதன் லயனின் அபார பந்துவீச்சினால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்திருந்தது.

பந்துவீச்சில் அசத்திய நேதன் லயன்; நியூசி.யை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!
வங்கதேச அணியில் மீண்டும் விளையாடுகிறாரா தமிம் இக்பால்?

இந்த நிலையில், 4-ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி நேதன் லயனின் சுழலில் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நியூசிலாந்து அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 59 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நேதன் லயன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து நேதன் லயன் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் நேதன் லயனின் 5-வது 10 விக்கெட்டுகள் இதுவாகும். ஆட்டநாயகனாக கேமரூன் கிரீன் அறிவிக்கப்பட்டார்.

பந்துவீச்சில் அசத்திய நேதன் லயன்; நியூசி.யை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணையும் பிரபல பயிற்சியாளர்!

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com