அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்: ஜோ ரூட்

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

ஜோ ரூட்
ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை!

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆடுவது கடினம். அவர் எப்போதும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை நிலைத்து ஆடவிடமால் வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்வார். மற்ற ஆஃப் ஸ்பின்னர்களைக் காட்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சில் வித்தியாசமான யுக்திகளைக் கையாள்கிறார்.

ஜோ ரூட்
சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

ஓவரின் ஒவ்வொரு பந்துகளையும் அவர் வித்தியாசமாக வீசுபவர். அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக பேட் செய்யும் பேட்ஸ்மேன்கள் மிகுந்த திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அஸ்வினின் பந்துவீச்சு சவால்களை அவர்களால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com