314வது நபராக தேவ்தத் படிக்கல் அறிமுகம்: இங்கிலாந்து 100/2 ரன்கள்!

இந்தியா - இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்கிறது.
தேவ்தத் படிக்கல்
தேவ்தத் படிக்கல்படம்: பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போ்ஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் இன்று (மாா்ச் 7) தொடங்கியது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. 100-ஆவது டெஸ்ட்டில் களம் காணும் 14-ஆவது இந்திய வீரா் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கினைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 25.3 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தேவ்தத் படிக்கல்
100வது டெஸ்ட்டில் அஸ்வின்: குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பு வரவேற்பு!

இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருக்கிறார். படிதாருக்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

57 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய படிக்கல்1521 ரன்கள் எடுத்துள்ளார். 2021இல் இலங்கைக்கு எதிராக இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். தற்போது முதன்முதலாக டெஸ்ட் அணியில் விளையாடுகிறார். 314வது டெஸ்ட் நபராக படிக்கல் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com