ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கியது. இந்தப் போட்டி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?
ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது போட்டிக்கான தொப்பியை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வழங்கி கௌரவப்படுத்தினார். 100-வது போட்டியில் விளையாடும் அஸ்வினின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.

100-வது போட்டிக்கான தொப்பியை பெற்ற பிறகு அஸ்வின் பேசியதாவது: ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருந்து வருகிறது. அதிக அளவிலான சிறுவர்கள் டி20 போட்டிகளில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கற்றுத் தர முடியாத பல விஷயங்களைக் கற்றுத் தரும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?
ஒரே தொடரில் இவ்வளவு சாதனைகளா? அசத்தும் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்!

டெஸ்ட் கிரிக்கெட் என்பது வாழ்க்கை போன்றது என நினைக்கிறேன். அழுத்தமான சூழலுக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொண்டு அதனை திறம்பட கையாள டெஸ்ட் கிரிக்கெட் கற்றுத் தரும். இது எனக்கு மட்டுமில்லாது சென்னையில் இருக்கும் எனது அப்பாவுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான தருணம். அவரால் இன்று இங்கு வரமுடியவில்லை. என்னுடைய அம்மா மற்றும் தாத்தாவின் உதவியோடு என்னை இந்த இடத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். கடினமான காலங்களில் எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எனது கிரிக்கெட் பயணத்தை எனது குழந்தைகளும் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com