இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ தலைவர்

இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியே காரணமென பிசிசிஐ தலைவர் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ தலைவர்

இங்கிலாந்து அணியின் தோல்விகளுக்கு அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் ஆக்ரோஷமான கேப்டன்சியே காரணமென பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கியது. இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ தலைவர்
ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தோல்விகளுக்கு அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் ஆக்ரோஷமான கேப்டன்சியே காரணமென பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இதுவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகவும் ஆக்ரோஷமான கேப்டன்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு அவரது இந்த ஆக்ரோஷமான கேப்டன்சியே காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். கடினமான சூழலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து வீரர்கள் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என நினைக்கவில்லை.

இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ தலைவர்
ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தந்திரமாக செயல்படுகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கியது. அதன்பின் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இங்கிலாந்து அவர்களது யுக்தியை மாற்றிக் கொள்ளவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது போன்று அதிரடியான ஆட்டத்தையே மீண்டும் தொடர்ந்தனர்.

ரோஹித் சர்மா மிகவும் பொறுமையாக செயல்பட்டார். முதல் டெஸ்ட் போட்டி ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. பின்னர் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் பொறுமையாக செயல்பட்ட ரோஹித் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இன்றைய போட்டியிலும் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவர்களது வீழ்ச்சிக்கு அவர்களே காரணம். இதுவரை இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com