
பிரபல ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அலி ஸத்ரான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஒருநாள் போட்டியில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக விளையாடியபோது அந்த அணிக்காக களமிறங்கிய நூர் அலி ஸத்ரான் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த வாரம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நூர் அலி ஸத்ரான் முடிவெடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1930 ரன்கள் குவித்துள்ளார். அதில் 11 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நூர் அலி ஸத்ரான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.