மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

100வது டெஸ்ட்டில் 2 நியூசிலாந்து வீரர்கள்: சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஐசிசி!

100வது டெஸ்ட் போட்டியினை விளையாடிய இரண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டது.

News image

நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், டிம் சௌதி. - படம்: ஐசிசி/ எக்ஸ்

Updated On :8 மார்ச் 2024, 3:01 pm IST

100வது டெஸ்ட் போட்டியினை விளையாடிய இரண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தினார். சமீபத்தில் கேன் வில்லியம்சன்-சாரா ரஹும் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து. இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன், டிம் சௌதி இருவருக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 162க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸி. சார்பாக ஹேசில்வுட் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஸ்டார்க் 3, கிரீன் 1 விகெட்டும் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஆஸி. முதல் நாள் முடிவில் 124/4 ரன்கள் எடுத்துள்ளது.

100வது போட்டியில் வில்லியம்சன் 17க்கும் சௌதி 26 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார்கள். கடந்த வியாழக்கிழமை (மார்ச்.7) இந்திய வீரர் அஸ்வின் தனது 100வது டெஸ்டினை விளையாடி வருகிறார்.

2010ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகிய வில்லியம்சன் 8,692 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதங்கள், 33 அரைசதங்கள், 6 இரட்டை சதங்கள் இதில் அடங்கும். ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசிசையில் முதலிடம் வகிக்கிறார்.

2008இல் டெஸ்ட்டில் அறிமுகமான டிம் சௌதி 378 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் டிம் சௌதி கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.