டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்த பிசிசிஐ!

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்த பிசிசிஐ!

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய ஆடவர் சீனியர் அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-1 என அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. 5வது போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஜெய்ஸ்வாலும் தேர்வானார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்த பிசிசிஐ!
100வது டெஸ்ட்டில் அஸ்வின் புதிய சாதனை!

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வீரர்களின் நிலையான வருவாய்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். 2022-2023 சீசன் முதல் ‘டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டம்’ செல்லுபடியாகும். போட்டி ஊதியத்துடன் ரூ.15 லட்சம் கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

5,6 போட்டிகள் விளையாடினால் ரூ.30 லட்சம் அளிக்கப்படும். அணியில் இருந்து பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்தாலும் ரூ. 15 லட்சம் தரப்படும். 7 அல்லது அதற்கு மேல் விளையாடினால் ரூ.45 லட்சம் தரப்படும். பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்தால் ரூ. 22.5 லட்சம் தரப்படும்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்த பிசிசிஐ!
உலக சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2ஆம் இடமும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 68.51 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com