விராட் கோலி இருந்தால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும்: அனில் கும்ப்ளே

விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அவர் எந்த டி20 அணிக்காக விளையாடினாலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.
விராட் கோலி இருந்தால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும்: அனில் கும்ப்ளே

விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் அவர் எந்த டி20 அணிக்காக விளையாடினாலும் வலிமை சேர்ப்பதாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக தொடர்ச்சியாக 16 சீசன்களில் விளையாடிய பெருமை அவரையே சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.

விராட் கோலி இருந்தால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும்: அனில் கும்ப்ளே
அடிப்படைத் தேவைகளுக்கு கூட ஒருவரின் உதவி தேவைப்பட்டது, ஆனால்... ரிஷப் பந்த் குறித்து ஷிகர் தவான்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நான் விளையாடியபோது விராட் கோலி அவரது ஐபிஎல் பயணத்தை பெங்களூரு அணியுடன் தொடங்கினார். அதிலிருந்து அவரது உடல்தகுதி, விளையாடும் விதம், சர்வதேசப் போட்டிகளில் அவரது சாதனைகள் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த அளவுக்கு சிறப்பான வீரர் என்பது நமக்குத் தெரியும். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவரது தொடர்ச்சியான பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. மைதானத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம் ஆட்டத்துக்கு தேவையான பரபரப்பைக் கொண்டு வருகிறது. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர் என்றார்.

விராட் கோலி இருந்தால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும்: அனில் கும்ப்ளே
ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வார்: ஆஸி. பயிற்சியாளர்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com