ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வார்: ஆஸி. பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், வார்னரின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகு அவர் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவர் 91 ரன்கள் எடுத்தார். அதன்பின் அவர் எடுத்த ரன்கள் முறையே 12, 11, 6, 31, 0, 11 மற்றும் 9 ஆகும்.

ஸ்டீவ் ஸ்மித்
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் காத்திருக்கிறார்கள். அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஸ்டீவ் ஸ்மித்தின் நோக்கமாக இருக்கும். ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க விரும்புகிறார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதே அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய பொறுப்பு. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஐபிஎல்.. முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா விலகல்: பிசிசிஐ

இந்த ஆண்டு நவம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com