8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்!

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Published On :12 மார்ச் 2024, 4:19 pm IST

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ரன்கள் குவித்து அசத்தினார். பிப்ரவரி மாதத்தில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த நபர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் 2 இரட்டை சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடித்தார். இந்த நிலையில், ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்ற ஜெய்ஸ்வால் பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல விருதுகளை வெல்வேன் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

ஐசிசி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை வீரர் பதும் நிசங்கா இடம்பெற்றிருந்த நிலையில் ஜெய்ஸ்வால் இந்த விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.