கடந்த 2003ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால், ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்மா ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரையில், குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, அவரது பணி நீக்க உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்மா ஜெய்ஸ்வால் பதவிநீக்கத்துக்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 2008ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்து பிறகு மீண்டும் பணியில் இணைந்தவர். மத்திய புலனாய்வு ஆணையம் மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இணைந்து நடத்திய விசாரணையில், பத்மா ஜெய்ஸ்வாலை பணியிலிருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2007 - 08ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங்க மாவட்ட துணை ஆணையராக பத்மா ஜெய்ஸ்வால் இருந்தபோது அங்கு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பிறகு பதவில் அமர்த்தப்பட்டார். சமார் 20 ஆண்டுகள் அருணாசலப்பிரதேசத்திலும், தில்லி, கோவா, புதுவையிலும் அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது, 2008ஆம் ஆண்டு அருணாசலில் பதிவான ஊழல் புகாரின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Summary
Padma Jaiswal has been removed from IAS duty over corruption allegations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா, ஜடேஜா முதலிடம்..! டாப் 10 பட்டியலில் ஜெய்ஸ்வால், கில்!

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு

ஓய்வு பெற்றாா்!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

