தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துளிகள்...

துளிகள்...

Updated On :12 மார்ச் 2024, 7:03 pm

பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ், ஆகாஷ், சந்தீப் குமாா் அடங்கிய அணி செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

உள்நாட்டு கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கா், இந்திய கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா், ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை - விதா்பா அணிகளின் இறுதி ஆட்டத்தைக் காண செவ்வாய்க்கிழமை நேரில் வந்தனா்.

சா்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவா் அணி ஓரிடம் சறுக்கி 4-ஆம் இடம் பிடிக்க, மகளிா் அணி 9-ஆம் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட்டில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய பேட்டா் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரா் விருது பெற்றாா்.

இத்தாலியில் நடைபெறும் உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் (71 கிலோ) காலிறுதியில் தோற்றதை அடுத்து, அந்தப் போட்டியில் இந்தியா்கள் எவரும் ஒலிம்பிக் வாய்ப்பை பெறாமல் நிறைவு செய்தனா். பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 4-1 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை சாய்த்தது. ஜாம்ஷெட்பூரில் வரும் 19-ஆம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறும் தேசிய பாரா பாட்மின்டன் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.