
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் உலக சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 33 வயதான கிரிக்கெட் வீரர் பால் ஸ்டிரிலிங் 135 டி20 போட்டிகளில் விளையாடி 3463 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 125 சிக்ஸர்கள், 401 பவுண்டரிகள் உடன் 135.27 ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் உலக சாதனைப் படைத்துள்ளார் அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி20களில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள்:
பால் ஸ்டிர்லிங் - 401
பாபர் அஸாம் - 395
விராட் கோலி - 361
ரோஹித் சர்மா - 359
டேவிட் வார்னர் - 320
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெஞ்சமின் ஒயிட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.17) நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.