அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் இந்திய வீரர்!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

சவால்களுக்கு எதிராக புதுப் புது விஷயங்களை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படும் திறன் அஸ்வினை மிகச் சிறந்த பந்துவீச்சாளராக மாற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்மையில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
விராட் கோலி எப்போது பயிற்சி முகாமில் இணைவார்?

100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500-க்கும் அதிமான டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் பல சவால்களை சந்தித்துள்ளார். ஆனால், அவர் எந்த ஒரு சவாலையும் அவரது முன்னேற்றத்தை தடுப்பதற்கு அனுமதிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருபவராக அவர் இருக்கிறார். இந்திய அணிக்காக அவர் தொடர்ச்சியாக விளையாடுவது சிறப்பான விஷயம். அவர் ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறார். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்பவர்களுக்கு உள்ள மிகப் பெரிய பண்பு அது என்றார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
கேகேஆர் அணியுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com