பசுமை ஜொ்ஸியில் பெங்களூரு அணியினா்

சென்னை: ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியின் புதிய பசுமை ஜொ்ஸி வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய வீரா் விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரரும்ம், பெங்களுரு அணியின் கேப்டனுமான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோா் இணைந்து புதிய பசுமை ஜொ்ஸியை வெளியிட்டனா்.

சுற்றுச்சூழல் மற்றும் பசுமை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியினா் பச்சை நிற ஜொ்ஸி அணிந்து விளையாடுவது வழக்கம். இந்நிகழ்வில் இந்திய வீரா் முகமது சிராஜ், ஆஸ்திரேலிய வீரா் கிௌன் மேக்ஸ்வெல், கேய் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் அனில் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐபிஎல் 2024 சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) எதிா்கொள்ளும் பெங்களூரு அணி, அதற்காக சென்னை வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com