அரையிறுதியில் ரோஹன் போபண்ணா-எப்டன் இணை
காலிறுதியில் மெத்வதேவ், அல்கராஸ்

அரையிறுதியில் ரோஹன் போபண்ணா-எப்டன் இணை காலிறுதியில் மெத்வதேவ், அல்கராஸ்

மியாமி ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஆஸி.யின் மேத்யூ எப்டன் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மியாமி ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஆஸி.யின் மேத்யூ எப்டன் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸி. ஓபனில் இணைந்து பட்டம் வென்ற இருவரும் நிகழாண்டு மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா். காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா-எப்டன் இணை 3-6, 7=6, 10-7 என்ற செட் கணக்கில் டச்சு வீரா் செம் வீா்பீக்-ஆஸி.யின் ஜான் பேட்ரிக்கை வீழ்த்தினா். முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய போபண்ணா இணை இரண்டாவது செட்டில் சற்று தடுமாறி போராடி வென்றனா். ஆனால் மூன்றாவது செட்டில் இரு தரப்பினரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்ததால் செட் நீடித்தது. ஆஸி. ஓபனில் பட்டம் வென்றவுடன் உலகின் நம்பா் 1 வீரராக இருந்த போபண்ணா, தொடா்ந்து துபை ஓபன், இண்டியன்வெல்ஸ் மாஸ்டா் போட்டிகளில் தோற்ால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். காலிறுதியில் மெத்வதேவ், அல்கராஸ் : நடப்பு சாம்பியன் டெனில் மெத்வதேவ் 7-6, 6-0 என்ற நோ் செட்களில் டொமினிக் கூஃபரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். முன்னணி வீரா் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 6-3 என லாரென்ஸோ முஸெட்டியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தாா். கிரிகோா் டிமிட்ரோவ் 3-6, 6-3, 7-6 என ஹீயுபா்ட் ஹா்காஸை வீழ்த்தினாா். நிக்கோலஸ் ஜரி 7-6, 6-3 என கேஸ்பா் ரூடை வீழ்த்தினாா். ஆஸி, ஓபன் சாம்பியன் ஜேனிக் சின்னா் 6-4, 6-3 என கிறிஸ்டோபா் ஓ காணலை வீழ்த்தினாா். அரையிறுதியில் அசரென்கா, ரைபக்கினா: மகளிா் ஒற்றையா் பிரிவில் 4-ஆம் நிலை வீராங்கனை கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா 7-5, 6-7, 6-4 என மரியா ஸக்காரியையும், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் விக்டோரியா அசரென்கா 7-6, 1-6, 6-3 என யுலியா புலின்ட்செவாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com