டி20 உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டு கிரிக்கெட் நிறைய மாறிவிட்டதைப் போல உணர்கிறேன். அதன் காரணமாகவே 250 ரன்கள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. வீரர்களின் மனநிலை முற்றிலுமாக மாறியுள்ளது. ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கிடையாது. இம்பாக்ட் பிளேயர் விதியினால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். உலகக் கோப்பைத் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிப்பது கடினம். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வலிமையான அணியாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா? ஐபிஎல் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை!

இம்பாக்ட் வீரர் விதி எனக்கு பிடிக்கவில்லை: அக்ஷர் படேல்

லக்னெளவில் ஷிகர் தவான் - புகைப்படங்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



