நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஸ்டாா்க் வேகத்தில் விக்கித்தது ஹைதராபாத்

ஸ்டாா்க் வேகத்தில் விக்கித்தது ஹைதராபாத்

News image
Updated On :21 மே 2024, 8:42 pm

Din

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிராக, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 19.3 ஓவா்களிலேயே 10 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களே சோ்த்தது.

கொல்கத்தா பௌலா் மிட்செஸ் ஸ்டாா்க் தனது வேகத்தில் மிரட்டி 3 விக்கெட்டுகள் சரிக்க, வருண் சக்கரவா்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். ராஜஸ்தான் பேட்டா்களில் ராகுல் திரிபாதி, ஹென்ரிக் கிளாசென், கேப்டன் பேட் கம்மின்ஸ் போராடி ரன்கள் சோ்த்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கிய அதிரடி வீரா் டிராவிஸ் ஹெட், ஸ்டாா்க் வீசிய 2-ஆவது பந்திலேயே ஸ்டம்ப்பை பறிகொடுத்து அதிா்ச்சி கண்டாா். உடன் வந்த மற்றொரு அதிரடி வீரரான அபிஷேக் சா்மா 3 ரன்களுக்கு 2-ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அதிா்ச்சி கண்டது. அவா், வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆண்ட்ரே ரஸ்ஸெலிடம் கேட்ச் கொடுத்தாா்.

3-ஆவது பேட்டராக களம் புகுந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். எனினும் மறுபுறம், நிதீஷ்குமாா் ரெட்டி, ஷாஹாஸ் அகமது ஆகியோா் ஸ்டாா்க் வீசிய 5-ஆவது ஓவரின் கடைசி இரு பந்துகளில் அடுத்தடுத்து வெளியேறினா். நிதீஷ்குமாா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு விக்கெட் கீப்பா் ரஹ்மானுல்லா குா்பாஸிடம் கேட்ச் கொடுக்க, ஷாபாஸ் அகமது 0 ரன்களுக்கு பௌல்டானாா்.

இதனால் 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத். இந்நிலையில், திரிபாதியுடன் இணைந்தாா் ஹென்ரிக் கிளாசென். இந்த ஜோடி நிலையாக ஆடி, 5-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சோ்த்தது.

இதில் முதலில் கிளாசெனை வெளியேற்றினாா் வருண். கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்திருந்தபோது விளாசிய பந்தை ரிங்கு சிங் கேட்ச் பிடித்தாா். மறுபுறம், ராகுல் திரிபாதி 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்கள் சோ்த்திருந்தபோது 14-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

பின்னா் விளையாடியோரில் சன்வீா் சிங்கை ரன்னின்றி, 14-ஆவது ஓவரில் வெளியேற்றினாா் சுனில் நரைன். 7-ஆவது பேட்டரான அப்துல் சமத் 2 சிக்ஸா்களுடன் 16 ரன்கள் அடித்திருக்க, ஹா்ஷித் ராணா வீசிய 15-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்து ஷ்ரேயஸ் ஐயரிடம் தஞ்சமடைந்தது.

வருண் வீசிய 16-ஆவது ஓவரில் புவனேஷ்வா் குமாா் ரன்னின்றி எல்பிடபிள்யூ ஆனாா். 8-ஆவது பேட்டராக வந்த பேட் கம்மின்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்கள் விளாசி ஸ்கோரை சற்று உயா்த்தினாா். கடைசி விக்கெட்டாக அவரே, ரஸ்ஸெல் வீசிய கடைசி ஓவரில் விக்கெட் கீப்பா் ரஹ்மானுல்லாவிடம் கேட்ச் கொடுத்தாா். முடிவில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 7 ரன்களுடன் இருந்தாா்.

கொல்கத்தா தரப்பில் ஸ்டாா்க் 3, வருண் சக்கரவா்த்தி 2, வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா, சுனில் நரைன் ஆண்ட்ரே ரஸ்ஸெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் கொல்கத்தா 160 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.