ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமேன் கெலிஃப் பெண்ணல்ல, ஆண்! மருத்துவ அறிக்கை!

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இமேன் கெலிஃப் ஆண் என்று மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
இமேன் கெலிஃப்
இமேன் கெலிஃப்
Published on
Updated on
1 min read

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற இமேன் கெலிஃப் ஆண் என்று உறுதி செய்துள்ள மருத்துவ அறிக்கையை பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியூவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இமேன் கெலிஃப் வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கெலிஃபுக்கும், இத்தாலிய வீராங்கனை ஏஞ்ஜெலா காரினிக்கும் இடையே நடந்த போட்டியில் 45 வினாடிகளிலேயே, போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார்.

``கெலிஃபின் தாக்குதல் ஒரு பெண்ணைப் போன்றதாக இல்லை. அதனால், நான் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’’ என்று கூறிய இத்தாலிய வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து, கெலிஃபின் பாலினம் தொடர்பான சர்ச்சையால் உலகமெங்கும் விமர்சனங்கள் எழுந்தன.

இமேன் கெலிஃப் கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குரோமோசோம் சோதனையில் தோல்வியடைந்தார். ஆனால் ஒலிம்பிக் நிர்வாகம் அவர் சரியான பாலின தகுதி பெற்றுள்ளதாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது.

இந்த நிலையில், இமேன் கெலிஃப் உடலில் டெஸ்டிக்கல்ஸ் (விரைகள்) மற்றும் எக்ஸ்ஒய் க்ரோமோசோம்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கை தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், 5-ஆல்ஃபா ரெடக்டேஸ் குறைபாடு எனப்படும் ஆண்களிடையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் குறைபாடு கெலிஃபின் உடலில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை, பிரெஞ்சு பத்திரிகையாளர் ஜஃபார் ஏட் ஆடியா வெளியிட்டுள்ளார்.

இந்த மருத்துவ அறிக்கை பாரீஸில் உள்ள க்ரெம்லின் - பைசெட்ரே மருத்துவமனை மற்றும் அல்ஜீரியாவில் உள்ள லாமைன் டெபாகின் மருத்துவமனை நிபுணர்களால் ஜூன் 2023 இல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையில், கெலிஃப் உடலில் உள் விரைகள் இருப்பதும், கருப்பை இல்லாததும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கும் நுண்ணிய ஆணுறுப்பு இருப்பதாகவும் எம்ஆர்ஐ மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அவர் ஆண் என்று மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

எனவே, அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட வேண்டுமென்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com