ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சின்னா், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: அரையிறுதிக்கும் தகுதி

நடப்பு சீசனில் இதுவரை சின்னரும், ஸ்வெரெவும் தலா 68 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளனா்.

News image

சின்னா்

Updated On :15 நவம்பர் 2024, 11:29 pm

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா், குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம், 1 மணி நேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இருவரும் சந்திப்பது, இது 15-ஆவது முறையாக இருக்க, சின்னா் 8-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா். இந்த நேருக்கு நோ் மோதல் கணக்கில் மெத்வதெவை சின்னா் பின்னுக்குத் தள்ளியது இதுவே முதல் முறையாகும்.

மறுபுறம் குரூப் சுற்றில், 2 தோல்வி, 1 வெற்றியைப் பதிவு செய்துள்ள மெத்வதெவ், அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை தோற்கடித்தாா். இருவரும் இத்துடன் 11-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ஸ்வெரெவ் 6-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.

இந்த ஆட்டம் 1 மணி நேரம், 57 நிமிஷங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம், நடப்பாண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறாா் ஸ்வெரெவ்.

அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஸ்வெரெவ், அதில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சந்திக்கிறாா். மறுபுறம், 2 தோல்வி, 1 வெற்றியுடன் இருக்கும் அல்கராஸ், அரையிறுதி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் - நாா்வேயின் கேஸ்பா் ரூடை நோ் செட்களில் வென்றால், அல்கராஸுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் இதுவரை சின்னரும், ஸ்வெரெவும் தலா 68 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளனா். 2015-க்குப் பிறகு இதுவே ஒரு சீசனில் ஒரு வீரரின் அதிகபட்ச வெற்றியாகும். இந்த முறை அதை இருவா் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.