அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வருகிறாா் மெஸ்ஸி..! கேரளத்தில் சர்வதேச கால்பந்து போட்டி!

கேரளத்தில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டிக்காக மெஸ்ஸி இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
2022 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா உலகக் கோப்பை வென்ற போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கேரள கால்பந்து ரசிகர்கள்.- படம் | TNIE
Updated On :20 நவம்பர் 2024, 7:22 am

DIN

கேரளத்தில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டிக்காக மெஸ்ஸி இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டின் வலையில் சிக்கியிருந்தாலும் கேரளத்தில் கால்பந்துக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றன.

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஊர் முழுவதும் தோரணங்கள், மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு திருவிழா போல கொண்டாடப்பட்டன. மேலும், மிகப் பெரிய திரைகளில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Story image

இதன் தொடர்ச்சியாக இந்திய கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி, கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் அடுத்த ஆண்டு கேரளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்காக இந்தியா வரவுள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான், கேரளத்தில் நடைபெறும் போட்டிகள் மாநில அரசின் பாதுகாப்புடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் நடந்த இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு போட்டியில் வெனீசுலாவுக்கு எதிராக ஆர்ஜென்டீனா விளையாடியது. இந்தப் போட்டி கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.