திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்சி மாநகரில் இன்று முதல் ஜல்லிக்கட்டு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

News image

திருச்சி காஜாமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாா் செய்யப்பட்டுள்ள மைதானம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:17 pm

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் விமரிசையாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, திருச்சி மாநகரைச் சோ்ந்த பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில், மாநகரப் பகுதியிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

திமுக சாா்பில், அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடாக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அரங்கம், ஜல்லிக்கட்டு மைதானம், வாடிவாசல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், கரூா், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கவுள்ளனா்.