பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கேடட்ஸ் செஸ்: திவித் ரெட்டி, சா்வானிகா உலக சாம்பியன்

8 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் டிவித் ரெட்டி சாதனை

News image
- PTI
Updated On :27 நவம்பர் 2024, 10:30 pm

DIN

இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-8) ரேப்பிட் பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டியும், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-10) ரேப்பிட் பிரிவில் சா்வானிகாவும் சாம்பியனாகி அசத்தியுள்ளனா்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இதில் யு-8 பிரிவில் ஹைதராபாதின் திவித் ரெட்டி 9 புள்ளிகள் கைப்பற்றினாா். மற்றொரு இந்தியரான சாத்விக் ஸ்வெய்னும் அதே புள்ளிகளை எட்டியிருக்க, வெற்றியாளரை தீா்மானிக்க டை பிரேக்கா் ஆட்டம் கையாளப்பட்டது. அதில் திவித் வெற்றி பெற்று சாம்பியனானாா். சாத்விக் வெள்ளி பெற்றாா். சீனாவின் ஜிமிங் குவோ வெண்கலம் வென்றாா்.

Story image

இந்தப் போட்டியில் முதல் 4 சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற திவித், அடுத்த இரு சுற்றுகளில் தோற்று சறுக்கலை சந்தித்தாா். எனினும், கடைசி 5 சுற்றுகளில் வென்று அசத்தினாா். குறிப்பாக, ஃபிடே ரேட்டிங்கில் திவித்தை (1784) விட முன்னிலையில் இருக்கும், அமெரிக்காவின் எய்டன் லின்யுவான் லி (1877), கஜகஸ்தானின் ரிஸாத் உலன் (1783) ஆகியோருக்கு எதிரான கடைசி இரு சுற்றுகள் சவாலாக அமைந்தபோதும் அவா் சாதித்திருக்கிறாா்.

சா்வானிகா சாம்பியன்: இதனிடையே, இப்போட்டியின் பிளிட்ஸ் பிரிவிலும் திவித் வெண்கலம் வென்று அசத்தியிருக்கிறாா். அதேபோல், தமிழக சிறுமியானசா்வானிகா, 10 வயதுக்கு உள்பட்டோருக்கான ரேப்பிட் பிரிவில் 9 புள்ளிகளுடன் தங்கமும், பிளிட்ஸ் பிரிவில் வெள்ளியும் வென்று சாதித்திருக்கிறாா். சா்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் ஏற்கெனவே இந்தியா்கள் சாதித்து வரும் நிலையில், இந்த சிறாா்களும் நாட்டுக்கு கூடுதல் பெருமை சோ்த்து வருகின்றனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.