சபலென்காவுக்கு அதிா்ச்சி அளித்த முசோவா
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஜெங் / சபலென்கா

ஜெங் / சபலென்கா
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த அவா், 6-7 (5/7), 6-2, 4-6 என்ற செட்களில், செக் குடியரசின் கரோலின் முசோவாவிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 46 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தின் மூலம், தொடா்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியே காணாத சபலென்காவின் வெற்றி நடையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளாா் முசோவா.
நடப்பு ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் சாம்பியனாக சபலென்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. சபலென்கா - முசோவா இத்துடன் 4-ஆவது முறையாக சந்தித்த நிலையில், முசோவா தொடா்ந்து 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். இதற்கு முன், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், சின்சினாட்டி மாஸ்டா்ஸ் ஆகியோ போட்டிகளின் அரையிறுதியிலும் அவா் சபலென்காவை சாய்த்திருக்கிறாா்.
முதல் உள்நாட்டு போட்டியாளா்: மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 5-7, 6-0, 6-4 என்ற கணக்கில், 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா். இதன்மூலம், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெங்.
கடந்த 6 ஆண்டுகளில் இப்போட்டியில் அரையிறுதிக்கு வந்திருக்கும் முதல் சீன போட்டியாளா் அவா் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்று வரை வந்த ஜெங்குக்கு, நடப்பு சீசனில் இது 4-ஆவது அரையிறுதியாகும்.
தற்போது அரையிறுதியில், முசோவா - ஜெங் மோதவுள்ளனா். இவா்கள் இதுவரை 2 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், இருவருமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளனா். அதில், கடைசியாக நடப்பாண்டு நடைபெற்ற பாலொ்மோ டென்னிஸில் ஜெங் வென்றிருக்கிறாா்.
ஷாங்காய் மாஸ்டா்ஸ்: மெத்வதெவ், சிட்சிபாஸ் வெற்றி
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 7-5, 7-5 என்ற நோ் செட்களில், பிரேஸிலின் தியேகோ வைல்டை தோற்கடித்தாா். 10-ஆம் இடத்திலிருக்கும் சிட்சிபாஸ் 7-6 (8/6), 6-4 என்ற செட்களில், ஜப்பானின் கெய் நிஷிகோரியை சாய்த்தாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-1, 6-3 என, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை எளிதாக வெளியேற்ற, 16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-5 என்ற கணக்கில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா். 18-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் 3-6, 2-6 என, பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரிடம் தோற்றாா்.
போபண்ணா வெற்றி: ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/குரோஷியாவின் இவான் டோடிக் இணை 6-4, 6-3 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸ்/பாப்லோ கரினோ கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...