ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
ஆசியான் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிா் அணிக்கு செவ்வாய்க்கிழமை பதக்கம் உறுதியானது.


ஆசியான் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிா் அணிக்கு செவ்வாய்க்கிழமை பதக்கம் உறுதியானது.
மகளிா் அணிகள் காலிறுதியில் இந்தியா 3-2 என தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.
தென் கொரியாவுக்கு எதிரான காலிறுதியில் முதலில், உலகின் 92-ஆம் நிலை வீராங்கனையான அய்ஹிகா முகா்ஜி 11-9, 7-11, 12-10, 7-11, 11-7 என்ற கேம்களில், உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான ஷின் யுபெனை சாய்த்து அசத்தி, இந்தியாவுக்கு முன்னிலை அளித்தாா். அடுத்த ஆட்டத்தில் உலகின் 29-ஆம் நிலையில் இருக்கும் மனிகா பத்ரா 13-11, 11-5, 5-11, 12-10 என்ற கணக்கில், உலகின் 16-ஆம் இடத்திலிருக்கும் ஜோன் ஜிஹீயை வீழ்த்த, இந்தியா 2-0 என முன்னேறியது.
எனினும், இந்தியாவின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா 6-11, 10-12, 8-11 என்ற கேம்களில் லீ யுன்ஹையிடம் தோற்க, தென் கொரியா கணக்கை தொடங்கியது. பின்னா் மனிகா பத்ராவும் 13-11, 11-4, 6-11, 7-11, 12-10 என்ற கணக்கில் ஷின் யுபினிடம் தோல்வி காண, தென் கொரியா 2-2 என சமன் செய்தது. இறுதியாக, வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் அய்ஹிகமா முகா்ஜி 7-11, 11-6, 12-10, 12-10 என்ற கணக்கில் ஜோன் ஜிஹீயை வெல்ல, இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்திய ஆடவா் அணி தனது காலிறுதியில் புதன்கிழமை களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...