விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

News image
இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால்- படம் | இன்ஸ்டா பதிவு
Updated On :24 அக்டோபர் 2024, 10:27 am

DIN

இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

16 ஆண்டுகளாக சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் தனது தந்தையின் தொழில், ஹாக்கியில் சிறந்து விளங்குவதற்கு உத்வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ராணி ராம்பாலில் தந்தை ஹரியாணா மாநிலத்தில் வண்டி இழுக்கும் தொழில் செய்துவந்தார்.

2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியைத் தலைமைத் தாங்கிய ராணி ராம்பால், தனது சிறப்பான தலைமையின் மூலம் இந்திய அணியை நான்காவது இடத்திற்கு முன்னேற்றினார்.

தனது ஓய்வு குறித்து ராணி ராம்பால் கூறுகையில், “இது ஒரு சிறப்பான பயணம். நான் இவ்வளவு காலம் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் சிறுவயது முதலே அதிகம் வறுமையை பார்த்துள்ளேன். அதனால், நாட்டிற்காக எதாவது செய்யவேண்டும், நாட்டை பிரதிநிதிதுவப்படுத்த விரும்பினேன்” என்றார்.

2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான குவாலிஃபயர் போட்டிகளில் தனது 14 வயதில் ராணி ராம்பால் அறிமுகமானார். இதுவரை 254 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 205 கோல்கள் அடித்துள்ளார்

ராணி ராம்பாலுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில் அவருக்கு நாட்டின் 4 வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

ராணி ராம்பால் தேசிய சப் - ஜூனியர் பெண்களுக்கான அணிக்கு சமீபத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.