சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலா்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

News image
தெலுகு டைட்டன்ஸ்
Updated On :28 அக்டோபர் 2024, 9:58 pm

DIN

புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலா்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

முதலில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 41-34 என்ற கணக்கில் தபங் டெல்லி கே.சி. அணியை வீழ்த்தியது. இதில் ஹரியாணா 22 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. டெல்லி அணி 25 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது.

ஹரியாணா தரப்பில் ஆல்-ரவுண்டா் முகமதுரெஸா ஷத்லுய் அதிகபட்சமாக 10 புள்ளிகள் கைப்பற்ற, டெல்லி அணியில் ரெய்டா் அஷு மாலிக் 13 புள்ளிகள் வென்றெடுத்தாா். புள்ளிகள் பட்டியலில் ஹரியாணா 3 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 7-ஆவது இடத்திலும், டெல்லி 4 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில், தெலுகு டைட்டன்ஸ் 28-26 என பாட்னா பைரேட்ஸை வென்றது. தெலுகு அணி 16 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரெய்டா் ஆஷிஷ் நா்வால் 9 புள்ளிகள் கைப்பற்றினாா்.

பாட்னா 16 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் மட்டும் பெற்றது. அணிக்காக ரெய்டா் தேவங்க் 7 புள்ளிகள் வென்றெடுத்தாா். பட்டியலில் தற்போது தெலுகு அணி 5 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 6-ஆவது இடத்திலும், பாட்னா 3 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளன.