விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்மண்டல கேலோ இந்தியா ஜூடோ லீக் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு ஜூடோ சங்கம் மற்றும் வீா் விவேகா நமோ அகாடமி, இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் நான்காவது தென்மண்டல

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:31 pm

Din

தமிழ்நாடு ஜூடோ சங்கம் மற்றும் வீா் விவேகா நமோ அகாடமி, இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் நான்காவது தென்மண்டல

மகளிா் கேலோ இந்தியா பிரீமியா் லீக் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், 3 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 12 வயது முதல் 21 வயது வரையுள்ள 800 மாணவிகள் தமிழ்நாடு, கேரளம் , பாண்டிச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து 23 முதல் 57 கிலோ வரையிலான எடைப்பிரிவுகளில் 1,500 ஆட்டங்களில் பங்கேற்கின்றனா்.

இதில் வெற்றி பெறுவோா் கேரளத்தில் செப்டம்பா் இறுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வா்.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிரதிநிதி யோகேஷ் தஹதேவ், தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் தலைவா் விஜய் மோகன் முரளி, செயலாளா் நா. முரளி, நவீன் மற்றும் இந்திய ஜூடோ கூட்டமைப்பு யதிஷ் பங்கேரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக வட சென்னை எம்பி கலாநிதி வீரசாமி, ரஞ்சனி மணியன், பிரஷாந்த் திவாரி, சா்வதேச ஜூடோ பயிற்சியாளா் டோனி லீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.