சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
இறுதிச்சுற்றில், ஜீவன்/விஜய்சுந்தர் கூட்டணி - ஜெர்மனியின் கான்ஸ்டன்டின் ஃபிரான்ட்ùஸன்/ஹெண்ட்ரிக் ஜெபென்ஸ் இணையை எதிர்கொண்டது. முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த இந்திய இணை, அடுத்த செட்டை போராடி டை பிரேக்கர் வரை கொண்டு சென்று 7-6 (7/5) என கைப்பற்றியது.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் டிசைடிங் சூப்பர் டை பிரேக்கரில், நெருக்கடியான நிலையிலும் ஜீவன்/விஜய் கூட்டணி சிறப்பாக ஆடியது. எதிரணியினர் 8 ஏஸ்களை பறக்கவிட்ட நிலையில், இந்திய ஜோடி 2 ஏஸ்களே விளாசியது. எனினும், தாங்கள் சந்தித்த 3 பிரேக் பாய்ண்ட்டுகளில் இரண்டை இந்திய இணை வெல்ல, இறுதியில் 10-7 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. இந்த ஆட்டம் 1 மணி நேரம், 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
ஜீவன்/விஜய் இருவரும் இணைந்து வெல்லும் முதல் ஏடிபி பட்டம் இதுவாகும். எனினும், ஜீவன் நெடுழஞ்செழியனுக்கு இது 2-ஆவது ஏடிபி டூர் பட்டம்.
இதற்கு முன், 2017-இல் சென்னை ஓபன் போட்டியில் அவர் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். விஜய்சுந்தருக்கு இது முதல் ஏடிபி பட்டம். சாம்பியனான இந்திய இணைக்கு ரூ.29.23 லட்சமும், ரன்னர் அப் ஜோடிக்கு ரூ.15.64 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தன.
777-இல் ஒரு சாதனை சாம்பியன்
ஹாங்ஸு ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், குரோஷியாவின் மரின் சிலிச் சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில் அவர் 7-6 (7/5), 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஜாங் ஜிùஸனை வீழ்த்தி அசத்தினார்.
உலகத் தரவரிசையில் 777-ஆம் நிலையில் இருக்கும் சிலிச், ஏடிபி தரவரிசையில் மிகக் குறைந்த ரேங்குடன் ஏடிபி டூர் போட்டியில் சாம்பியனான வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன், 1998-இல் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் 550-ஆவது ரேங்கில் இருந்தபோது அடிலெய்ட் ஓபன் போட்டியில் சாம்பியனானதே சாதனையாக இருந்தது. மரின் சிலிச் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அதை முறியடித்திருக்கிறார்.
சிலிச்சின் கேரியரில் இது அவரின் 21-ஆவது பட்டமாகும். எனினும், 2021-க்குப் பிறகு அவர் வெல்லும் முதல் பட்டம் இது. இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திக்கவிருக்கிறார். இறுதிச்சுற்றில் சிலிச் - ஜிùஸன் பரஸ்பரம் கடும் சவால் அளித்தனர். இருவருமே தாங்கள் சந்தித்த பிரேக் பாய்ண்ட்டுகளை வென்றெடுத்தனர். சிலிச் 34 வின்னர்களை பறக்கவிட, ஜிùஸன் 26 வின்னர்கள் விளாசினார்.
உள்நாட்டு வீரர் என்ற முறையில் ஜிùஸனுக்கு ரசிகர்கள் ஆதவரவு இருந்தபோதும், அதைக் கடந்து சிலிச் வெற்றியைப் பதிவு செய்தார். ஜிùஸனுக்கு இது முதல் ஏடிபி டூர் இறுதிச்சுற்றாக இருந்தது. வெற்றி பெற்ற சிலிச்சுக்கு 250 ஏடிபி புள்ளிகளும், ரூ.1.27 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. ஜிùஸனுக்கு 165 ஏடிபி புள்ளிகளுடன், ரூ.74 லட்சம் பரிசுத் தொகையும் கிடைத்தது.