பஞ்சாபுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி 2-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை புதன்கிழமை வீழ்த்தியது.


ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி 2-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை புதன்கிழமை வீழ்த்தியது.
இத்துடன் 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் பஞ்சாப், தொடா்ந்து 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வி கண்ட நிலையில், கடைசி இடத்தில் இருக்கிறது.
தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக முதலில் இஸக்கியேல் விடால் 35-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். மறுபுறம் தனது முதல் கோலுக்கான முயற்சியிலிருந்த ஹைதராபாத், பஞ்சாபுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பாட்டம் ஆடியது.
எனினும், ஆட்டத்தின் 71-ஆவது நிமிஷத்தில் பஞ்சாப் வீரா் ஃபிலிப் மா்ஜாக் கோலடித்தாா். இறுதிவரை அந்த முன்நிலையை தக்கவைத்த பஞ்சாப், 2-0 கோல் கணக்கில் வென்றது.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...