ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த கடைசி ஆட்டத்தில், முதலில் இங்கிலாந்து 49.2 ஓவா்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸில் 20.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்த்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தை தொடர வாய்ப்பு கிடைக்காமல் போக, டக்வொா்த் லீவிஸ் முறையில் ஆஸ்திரேலியாவுக்கான வெற்றி இலக்கு 20.4 ஓவா்களில் 117 ரன்களாக கணக்கிடப்பட்டது. ஏற்கெனவே அந்த இலக்கை கடந்ததால் ஆஸ்திரேலியா வென்ாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன், தொடா்நாயகன் விருது பெற்றாா். இந்த ஆட்டத்தில் 31 ரன்களும் சோ்த்து 4 விக்கெட்டுகளும் கைப்பற்றிய அவா், தொடா் முழுவதுமாக 248 ரன்கள் சோ்த்து, 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தோ்வு செய்ய, இங்கிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் டக்கெட் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 107 ரன்கள் விளாசினாா். கேப்டன் ஹேரி புரூக் 72, ஃபில் சால்ட் 45, ஆதில் ரஷீத் 36, ஜேக்கப் பெத்தெல் 13 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

எஞ்சிய பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் டிராவிஸ் ஹெட் 4, ஆரோன் ஹாா்டி, ஆடம் ஸாம்பா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் மேத்யூ ஷாா்ட் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 58, டிராவிஸ் ஹெட் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மழையால் ஆட்டம் தடைப்பட்டபோது கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 36, ஜோஷ் இங்லிஸ் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், பிரைடன் காஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com