சிக்ஸர் அடித்து சதமடித்த ஜெய்ஸ்வால்: வலுவான நிலையில் இந்தியா!

சிக்ஸர் அடித்து சதமடித்த ஜெய்ஸ்வால்: வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியுள்ளார்.  
Published on

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதல் ஆட்டத்தில் வென்று இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா என முக்கியமான வீரா்கள் இல்லாதது அணியை பாதித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

அதிரடியாக ஆரம்பித்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை இஅழந்து தடுமாறி வருகிறது. ரோஹித் சர்மா 14 ரன்களுக்கும் ஷுப்மன் கில் 34க்கும் ஷ்ரேயஸ் ஐயர் 27 ரன்களுக்கும்  அவுட்டாகினர். 

அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில்ஸர் அடித்து தனது சதத்தினை நிறைவு செய்தார். இது இவரது 2வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 185 பந்துகளில் 125 ரன்களும் ரஜத் படிதார் 25 ரன்களுடன் எடுத்து விளையாடி வருகிறார்கள்.

63 ஓவரில் இந்திய அணி 225/3 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com