முதல் டி20: டேவிட் வார்னர் அதிரடி; மே.இ.தீவுகளுக்கு 214 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7  விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7  விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜோஷ் இங்லிஷ் களமிறங்கினர். இந்த இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் 39 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் (16 ரன்கள்), மேக்ஸ்வெல் (10 ரன்கள்), ஸ்டொய்னிஸ் (9 ரன்கள்), மேத்யூ வேட் (21 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆண்ட்ரே ரசல் 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com