உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023-2025-க்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023-2025-க்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னருக்கு இந்த டெஸ்ட் தொடர் மறக்க முடியாததாக அமைந்தது. 

கடந்த ஆண்டு பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி, 50  ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி என ஐசிசியின் இரண்டு கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 2023 ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது போலவே 2024 ஆம் ஆண்டும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலும், இந்திய அணி தென்னாப்பிரிக்க தொடரை 1-1  என்ற கணக்கில் சமன் செய்ததாலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 56.25 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 54.16 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பாகிஸ்தான் அணி 36.66 சதவிகித புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com