இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் திருப்தியற்றது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்தன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றிலேயே மிகக் குறுகிய இடைவெளியில் முடிவடைந்த போட்டியாக மாறியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 642 பந்துகளே வீசப்பட்டன. இந்தப் போட்டிக்குப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் முகமது ஷமி!
இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் ஆடுகளம் திருப்தியற்றது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
The recently concluded shortest-ever Test in Cape Town has received an ICC pitch rating#WTC25 | #SAvINDhttps://t.co/rkK47P8Y58
â ICC (@ICC) January 9, 2024
இது தொடர்பாக ஐசிசி தொடர்பில் தெரிவித்திருப்பதாவது: நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. பந்துகள் தீடிரென பௌன்சராகின்றன. பந்துகள் அதிகமாக பௌன்சரானதை ஆட்டம் முழுவதும் பார்க்க முடிந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் கடினம். சில பேட்ஸ்மேன்கள் தங்களது கையுறைகளில் அடி வாங்கினர். அதிகப்படியான பௌன்சரால் நிறைய விக்கெட்டுகளும் விழுந்தன. நியூலேண்ட்ஸ் ஆடுகளம் திருப்தியற்றதாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நியூலேண்ட்ஸ் ஆடுகளம் குறித்து ஏற்கனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


