இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் தயாராவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் தயாராவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக முகமது ஷமி பேசியதாவது: அடுத்த இரண்டு தொடர்கள் மிகப் பெரிய தொடர்கள் என்பதால் என்னை முழு உடல்தகுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். எனது உடல் தகுதியில் கவனம் செலுத்த உள்ளேன். எனது திறமை குறித்து கவலையில்லை. முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் எனது திறமை மைதானத்தில் வெளிப்படும் என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார். 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய முகமது ஷமிக்கு இன்று (ஜனவரி 9) அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி!

முதல்வர் விஜய் என்ன சொன்னார்? மெட்ரோவில் முதல்வருடன் பயணித்த நபர்

இன்றைய ஜூலை 29 செய்திகள் - நேரலை!

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் - நந்தனம்! மெட்ரோவில் பயணிக்கும் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |



