ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்‌ஷி!

காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து...

News image

குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி சௌதரி . - படம்: எக்ஸ் / சாய் மீடியா.

Updated On :29 ஜூலை 2026, 6:02 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி சௌதரி (25 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க, இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி சௌதரி மகளிர் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கேட்லின் ஃப்ரையர்ஸ் உடன் மோதினார்.

இந்தக் காலிறுதிப் போட்டியில், சாக்‌ஷி சௌதரி 3 சுற்றுகளிலும் வென்றார். அனைத்து நடுவர்களும் சாக்‌ஷிக்கு ஆதரவாகவே புள்ளிகளை வழங்கியதால், 5-0 என அபார வெற்றியைப் பதிவுசெய்தார்.

முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஐந்தாவது வீராங்கனையாக சாக்‌ஷி இணைந்துள்ளார்.

சாக்‌ஷி தனது பலமான தூரத்தில் இருந்து தாக்குதலில் சிறப்பாகச் செயல்பட்டார். தனது உயரம், கால் நகர்கத்தலில் அற்புதமாக விளையாடிய சாக்‌ஷி அபார வெற்றியைப் பதிவு செய்தார்.

Summary

Sakshi assures fifth boxing medal for India at CWG

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.