
கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
முதல் சுற்றில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர், 12-21, 21-18, 21-16 என்ற கேம்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவரும், இந்தோனேசிய வீரருமான ஜோனதன் கிறிஸ்டியை சாய்த்து அசத்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 5 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக, ஹாங்காங்கின் முன்னாள் உலகின் நம்பர் 1 வீரரான நிக் கா லாங் அங்கûஸ சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.
எனினும் மகளிர் ஒற்றையரில், தகுதிச்சுற்று வீராங்கனையான இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என சீனாவின் ஜாங் யி மானிடம் வீழ்ந்தார்.
ஆடவர் இரட்டையரில் எம்.ஆர்.அர்ஜுன்/துருவ் கபிலா இணை 16-21, 19-21 என்ற கேம்களில் சீன தைபேவின் ஃபாங் சி லீ/ஃபாங் ஜென் லீ கூட்டணியிடம் வெற்றியை இழந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-13, 21-16 என மலேசியாவின் ஃபிரான்செஸ்கா கோர்பெட்/அலிசன் லீ ஜோடியை சாய்த்தது. எனினும், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா ஜோடி 12-21, 11-21 என்ற கேம்களில் ஜப்பானின் மயு மட்சுமோடோ/வகானா நகாஹரா இணையிடம் தோற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






