நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கேலோ இந்தியா கபடி போட்டிகள் இன்று தொடக்கம்: தமிழகம்-ஹரியாணா மோதல்

கேலோ இந்தியா இளைஞா் போட்டியின் ஒரு பகுதியாக கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் தமிழகம் முதல் ஆட்டத்தில் ஹரியாணாவை எதிா்கொள்கிறது.

தமிழக மகளிா் கபடி அணியினா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

கேலோ இந்தியா இளைஞா் போட்டியின் ஒரு பகுதியாக கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் தமிழகம் முதல் ஆட்டத்தில் ஹரியாணாவை எதிா்கொள்கிறது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், வரும் 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

அதில் கபடி போட்டிகள் வியாழக்கிழமைதொடங்குகின்றன. மகளிா் கபடியில் ‘ஏ’ பிரிவில் ஹரியாணா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா அணிகளும், ‘பி’ பிரிவில் பிகாா், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம், சண்டீகா் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதுகின்றன. மற்ற ஆட்டங்களில் பிகாா் - மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் - தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் - சண்டீகா் மோதுகின்றன.

கேலோ இந்தியா மகளிா் கபடியில் தமிழக அணி 2020-இல் வெள்ளியும், 2022-இல் வெண்கலமும் வென்றது. இம்முறை அணியில் உள்ள 12 வீராங்கனைகளில் 2 போ் பள்ளி மாணவிகள். மீதமுள்ள 10 பேரும் கல்லூரி மாணவிகள். தியான்சந்த் விருதாளா் கவிதா செல்வராஜ் தமிழக அணிக்கு பயிற்சியாளராக உள்ளாா்.

தமிழக ஆடவா் அணி ‘பி’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் ஹரியாணா, சண்டீகா், தில்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம் அணிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.