டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் விவரம் தனக்குத் தெரியும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் விவரம் தனக்குத் தெரியும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் சேர்க்கப்படாமல் போகலாம். நாங்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடியபோது, நிறைய வீரர்கள் டி20 போட்டிகளில் விளையாட பயன்படுத்தப்பட்டார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடியபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்படும்போது சிலரின் பெயர் விடுபடக் கூடும். அது அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஆனால், தெளிவாக அணியை தேர்வு செய்வதே எங்களது வேலை.
இதையும் படிக்க: ஜடேஜாவை விட அக்சர் படேல் திறமையானவர்: பார்த்திவ் படேல்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அணியில் இடம்பெறவுள்ள 8-10 வீரர்கள் யார் என எனக்குத் தெரியும். நானும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அணியில் தெளிவு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அணியை கேப்டனாக வழிநடத்தியதிலிருந்து அனைவரையும் நம்மால் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்பதை கற்றுக்கொண்டேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசு நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி கேள்வி

முதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்!
தொகுதி மறுசீரமைப்பு - திமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



