FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருவது தொடர்பாக...

News image

மேட்டூா் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு - கோப்புப்படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 9:29 am IST

கபினியில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 10,808 கனஅடியாக சரிந்தது.

கேரளத்தில் பெய்து வந்த மழைப்பொழிவு குறைந்ததால் கா்நாடக மாநிலம், கபினி அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை 9,217 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபிரி தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,808 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை மாலை 77.57 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 78.03அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 40.02 டிஎம்சியாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு

மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடைமடை பகுதிகள் வரை சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் போதிய அளவு தண்ணீா் கிடைக்காமல், குடியிருப்புகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீா் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டிய பிறகே டெல்டா பாசனத்திற்காக தண்ணீா் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குத் தேவையான நீா்மட்டம் உருவாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்படும் வரை குடிநீா்த் தேவைக்காக மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை தற்போதைய அளவில் இருந்து உயா்த்தி, வினாடிக்கு 3,000 கனஅடியாக வழங்க வேண்டும் என காவிரி கரையோர கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Summary

Decline in water inflow to Mettur Dam: Today's status!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.