மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 17) அடிலெய்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 50 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 4-வது வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கவாஜா 45 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேமரூன் கிரீன் மற்றும் நாதன் லயன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 22 ரன்கள் பின் தங்கியிருந்தது.
மூன்றாம் நாளான இன்று மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 26 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

16.5.1976: சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை: மந்திரி கண்டிப்பு

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

ஆந்திரத்தில் 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை: ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினா்

மேற்கு வங்கம்: பயிற்சி மருத்துவா் பாலியல் கொலைச் சம்பவம்: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

