முதல் டெஸ்ட் தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

ஹைதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வி மெதுவான ஆடுகளங்களிலும் பேஷ்பால் யுக்தி திறன்மிக்கதாக இருக்கும் என இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்தார்.
முதல் டெஸ்ட் தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

ஹைதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வி மெதுவான ஆடுகளங்களிலும் பேஷ்பால் யுக்தி திறன்மிக்கதாக இருக்கும் என இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

ஹைதாராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. ஆலி போப்பின் அதிரடியான பேட்டிங்கும், டாம் ஹார்ட்லியின் சிறப்பான பந்துவீச்சும் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியது. இந்த நிலையில், ஹைதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வி மெதுவான ஆடுகளங்களிலும் பேஷ்பால் யுக்தி திறன்மிக்கதாக இருக்கும் என இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்காதது அவர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கும். இந்திய அணி முதல்  இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்தது. ஆனால், அவர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடியிருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்கலாம்.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய அணி இதுபோன்ற தோல்விகளிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது தெரியும். அதனால் அடுத்தப் போட்டி இங்கிலாந்துக்கு சவாலானதாக இருக்கும். அதே சமயம் மெதுவான ஆடுகளங்களிலும் இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தி திறன்மிக்கதாக இருக்கும் என்ற எச்சரிக்கையை இந்திய அணிக்கு இங்கிலாந்து கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது என்றார். 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com