பாா்சிலோனா ஓபன்: கோா்டா வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா்.

Updated On :14 ஏப்ரல் 2025, 9:51 pm

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா்.
500 ரேங்கிங் புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில், கோா்டா 3-6, 6-3, 6-2 என்ற செட்களில் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை வீழ்த்தினாா்.
எனினும் உள்நாட்டு வீரா் ராபா்டோ பேனா 1-6, 5-7 என்ற செட்களில் பிரிட்டனின் ஜேக்கப் ஃபோ்ன்லியிடம் தோல்வி கண்டாா்.
சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச் 7-5, 7-6 (8/6) என்ற கணக்கில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை வெளியேற்றினாா்.
ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸ் 7-5, 5-7, 6-4 என அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை தோற்கடித்தாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...